கலவரமாக போகும் பிக்பாஸ் வீடு.. ஜி பி முத்துக்கு பதிலாக என்ட்ரி கொடுக்கவிருக்கும் பிரபலம் !

mansoor alikhan to be part of bb6 instead of gpmuthu

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

mansoor alikhan to be part of bb6 instead of gpmuthu

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.

mansoor alikhan to be part of bb6 instead of gpmuthu

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

mansoor alikhan to be part of bb6 instead of gpmuthu

இதில், ஜி.பி.முத்து அவர்களுக்கு நிறைய பேன்ஸ் & பாலோயர்ஸ் கூடியுள்ளனர். டிக் டாக், யூடியூப்-ன் மூலம் மக்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து. தனக்கென இணைய தளங்களில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் ஜி.பி.முத்து.

mansoor alikhan to be part of bb6 instead of gpmuthu

இந்த பிக்பாஸ் சீசனில் மக்களை பெரியளவில் கவர்ந்த போட்டியாளராகவும் திகழ்ந்து வந்தார். இந்நிலையில், ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். தன்னுடைய மகனுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்ட காரணத்தினால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

mansoor alikhan to be part of bb6 instead of gpmuthu

இந்நிலையில், அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை களத்தில் இறக்க விஜய் டிவி தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அது பிரபல நடிகரான மன்சூர் அலிகான் தான். எதையும் நேருக்கு நேராக பேசும் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல முடிவெடுத்தால் நிச்சயம் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

mansoor alikhan to be part of bb6 instead of gpmuthu

Share this post