'தளபதி 67' படத்தில் டில்லி கேரக்டர்? 'சர்தார்' வெற்றி விழாவில் கார்த்தி சொன்ன தகவல் !

karthi speaks up about thalapathy67 in sardhar success meet video getting viral

விக்ரம் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப்படம் ’தளபதி 67’. இப்படத்தின் அப்டேட் கேட்டு லோகேஷை ரசிகர்கள் பாடாய்ப்படுத்தி வருகின்றனர். மேலும், இப்படத்தில் இவர்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என ஒரு பெரிய வியூக லிஸ்டையே ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.

karthi speaks up about thalapathy67 in sardhar success meet video getting viral

தற்போது, இதுகுறித்து நடிகர் கார்த்தி நேற்று நடந்த ‘சர்தார்’ வெற்றி விழாவில் இதுகுறித்து பேசியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படமான ’கைதி’ படத்தின் டெல்லி கேரக்டர் ஒரே ஒரு காட்சியில் இடம்பெற்றது என்பது தெரிந்ததே.

karthi speaks up about thalapathy67 in sardhar success meet video getting viral

அதே போல் ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் ரோலக்ஸ் மற்றும் டெல்லி கேரக்டர்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், லோகேஷ் சினிமா யூனிவர்ஸ் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருவதால் லோகேஷின் அடுத்த படமான ’தளபதி 67’ படத்திலும் ரோலக்ஸ், டெல்லி கேரக்டர்கள் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

karthi speaks up about thalapathy67 in sardhar success meet video getting viral

நேற்று நடைபெற்ற ’சர்தார்’ வெற்றி விழாவில் ‘தளபதி 67’ படத்தில் கார்த்தியின் டெல்லி கேரக்டர் உண்டா? என்று கேட்டபோது அதற்கு பதில் அளித்த நடிகர் கார்த்தி ’அது அவ்வளவு ஈஸி இல்லைங்க’ என்று கூறினார். இரண்டு திரைப்படங்களையும் வேறுவேறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர் என்றும், வேறு வேறு உரிமைகள் உள்ளது என்றும் கூறினார்.

karthi speaks up about thalapathy67 in sardhar success meet video getting viral

எனவே ’தளபதி 67’ படத்தில் டெல்லி கேரக்டரை இணைப்பது அவ்வளவு ஈஸி இல்லை என்றும், எல்லோருக்கும் ஆசை இருக்கலாம் ஆனால் அது சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் கார்த்தி நடிக்கும் ’கைதி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது என்பதை அவர் உறுதி செய்தார்.

Share this post