விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன் நடித்துள்ள ‘கனெக்ட்’.. போஸ்டருடன் வெளியான அப்டேட்

nayanthara starring connect movie poster released and viral

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

nayanthara starring connect movie poster released and viral

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

nayanthara starring connect movie poster released and viral

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

nayanthara starring connect movie poster released and viral

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

nayanthara starring connect movie poster released and viral

இந்நிலையில், அக்டோபர் 9ம் தேதி, திடீரென விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில், நயனும் நானும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என போட்டோவுடன் அறிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

nayanthara starring connect movie poster released and viral

கர்ப்பமாக நயன்தாரா இல்லை, திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆகியுள்ளது, அப்புறம் எப்படி என ரசிகர்கள் முதல் அனைவரும் குழம்பிய நிலையில், இவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக தகவல்கள் வெளியானது. இது தான் பெரிய சர்ச்சையை உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் பெரும் வைரல் ஆனது.

nayanthara starring connect movie poster released and viral

இதற்கு முறையான விளக்கத்தையும், 5 வருடங்களுக்கு முன் பதிவு திருமணம் செய்துள்ளதாகவும் அவர்கள் ஆதாரங்கள் சமர்பித்ததாக தகவல்கள் வெளியானது.

nayanthara starring connect movie poster released and viral

இந்நிலையில், நேற்று தலை தீபாவளியை தங்களது குழந்தைகளுடன் நயன்தாரா, விக்னேஷ் கொண்டாடி உள்ளனர். கையில் இரட்டை குழந்தைகளுடன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறிய வீடியோ மற்றும் போட்டோஸ் செம வைரல் ஆனது.

nayanthara starring connect movie poster released and viral

தற்போது நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

nayanthara starring connect movie poster released and viral

கனெக்ட் படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த மாயா மற்றும் டாப்ஸி நடிப்பில் வெளிவந்த கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்களை இயக்கியவர். கனெக்ட் படத்தையும் அவர் அதே பாணியில் இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

nayanthara starring connect movie poster released and viral

இந்நிலையில், கனெக்ட் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தீபாவளியையொட்டி இப்படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அதில் வினய், நயன்தாரா, சத்யராஜ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இதன்மூலம் இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால் அது திரையரங்கிலா அல்லது ஓடிடியிலா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Share this post