நான் மன்னிப்பு கேட்கிற ஜாதியா… மன்னிப்பு கேட்கிற மனுஷனா… அடம்பிடிக்கும் மன்சூர் அலிகான்..!

mansoor-ali-khan-trisha-controversy-mansoor-ali-khan-clarifies-his-statement-on-trisha

15 வருடங்களுக்கு பிறகு லியோ படத்தின் மூலமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இந்த படத்தில் இவர்களுக்கு இடம் பெற்று இருந்த ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி அமைந்திருந்தது.

mansoor-ali-khan-trisha-controversy-mansoor-ali-khan-clarifies-his-statement-on-trisha

இதனையடுத்து, திரிஷா நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மன்சூர் அலிகான் இந்த விஷயத்தை சொல்லி இருப்பேன்.

mansoor-ali-khan-trisha-controversy-mansoor-ali-khan-clarifies-his-statement-on-trisha

ஆனால், கலவரம் பண்ண சில பேர் இருக்கிறார்கள். அதனால் சும்மா இருந்து விட்டேன். திரிஷாவுடன் நடிக்கிறோம் பெட்ரூம் சீன் இருக்கும் குஷ்பு, ரோஜாவை கட்டிலில்தூக்கி போட்ட மாதிரி திரிஷா போடலாம் என்று நினைத்தேன் என மன்சூர் அலி கான் கூறியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

mansoor-ali-khan-trisha-controversy-mansoor-ali-khan-clarifies-his-statement-on-trisha

இது குறித்த அவர் வெளியீட்ட அறிக்கையில் நான் வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், வேண்டும் என்று இதுபோன்ற அவதூறுகள் பரப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பழைய படங்கள் போல கதாநாயகிகளுடன் தற்போது நடிக்க வாய்ப்பில்லை என்பதை நகைச்சுவையாக தெரிவித்தேன். அந்த வீடியோவை கட் செய்து அவதூறு பரவி வருகிறார்கள். இதற்கு எல்லாம் அஞ்சு பவன் நான் அல்ல என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நான் எப்போதும் சக நடிகைகளுக்கும் மரியாதை கொடுப்பவன் த்ரிஷா குறித்து நான் பேசிய வீடியோவை தவறாக கட் செய்து காண்பித்துள்ளார்கள். உலகத்தில் எத்தனையோ வேலை இருக்கு போய் பொழப்ப பாருங்க என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

mansoor-ali-khan-trisha-controversy-mansoor-ali-khan-clarifies-his-statement-on-trisha

இதனையடுத்து, நடிகர் சங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது. தான் தப்பு செய்தால் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் மன்னிப்பு கேட்கிற ஜாதியா மன்னிப்பு கேட்கிற மனுசனா? இது குறித்து, நடிகர் சங்கத்திடம் பேசி இருக்கிறேன். அந்த த்ரிஷாவை வரவைத்து நான் பேசிய முழு வீடியோவையும் போட்டு காட்டுவேன். அப்போதுதான் அவர்களுக்கு உண்மை புரியும் என்று தெரிவித்துள்ளார்.

Share this post