மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு.. திரிஷாவிற்காக களத்தில் இறங்கிய சூப்பர் ஸ்டார்..!

mansoor-ali-khan-says-that-he-will-not-apologize

த்ரிஷா குறித்து தவறான முறையில் பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து, நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் பின்னர் பேசிய மகளிர் ஆணையம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

mansoor-ali-khan-says-that-he-will-not-apologize

ஆனால், இதுவரை மன்சூர் அலிகான் இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்க போவதில்லை என தெளிவாக கூறியுள்ளார். மேலும், த்ரிஷா குறித்து தான் தவறாக ஏதும் பேசவில்லை என்று கூறியும், இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் செய்தது தவறு என்றும், தான் பேசியது தொடர்பாக தன்னிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவில்லை என்றும், மக்களுக்கு தன்னை பற்றி நன்றாக தெரியும் தமிழ்நாடு தன் பக்கம் தான் என்று பேசியுள்ளார்.

மேலும், இது மட்டும் இன்றி நடிகை திரிஷா தன்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி இவர் பேசியுள்ளது. மேலும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

mansoor-ali-khan-says-that-he-will-not-apologize

இந்நிலையில், நட்சத்திரங்கள் பலரும் திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர் சிரஞ்சீவி நடிகர் த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது மிகவும் அருவருப்பான விஷயம் நான் த்ரிஷாவுடன் நிற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Share this post