மன்சூர் அலிகானை டீல் பன்ற விதம் OK தான்.. ராதாரவிய மறந்துட்டீங்களே.. சின்மயி ட்வீட்..!

Radha Ravi speech about Aishwarya Rai

த்ரிஷா குறித்து தவறான முறையில் பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து, நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் பின்னர் பேசிய மகளிர் ஆணையம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Radha Ravi speech about Aishwarya Rai

ஆனால், இதுவரை மன்சூர் அலிகான் இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்க போவதில்லை என தெளிவாக கூறியுள்ளார். மேலும், த்ரிஷா குறித்து தான் தவறாக ஏதும் பேசவில்லை என்று கூறியும், இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் செய்தது தவறு என்றும், தான் பேசியது தொடர்பாக தன்னிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவில்லை என்றும், மக்களுக்கு தன்னை பற்றி நன்றாக தெரியும் தமிழ்நாடு தன் பக்கம் தான் என்று பேசியுள்ளார்.

மேலும், இது மட்டும் இன்றி நடிகை திரிஷா தன்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி இவர் பேசியுள்ளது. மேலும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Radha Ravi speech about Aishwarya Rai

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த சின்மயி மன்சூர் அலிகான் பேசியது மட்டுமல்ல இவரைப் போல் இதற்கு முன்பு பலரும் நடிகைகள் குறித்து மோசமாக பேசிய உள்ளனர். அதில், ஒருவர் தான் ராதாரவி. இவர் ஒரு முறை மேடையில் பேசும்போது எனக்கு ஹிந்தி தெரியாது. தமிழ் தான் தெரியும். எனக்கு ஹிந்தி தெரியாது. எனக்கு ஹிந்தி தெரிந்து இருந்தால் பாலிவுட் சென்று ஐஸ்வர்யா ராய்யை கெடுத்துருப்பேன். வேறு என்ன எனக்கு கடவுள் வேடமா படத்தில் கொடுக்கிறார்கள் என சர்ச்சையாக பேசியிருந்தால், இந்த வீடியோவை சின்மயி தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்த விஷயமும் தற்போது படு வைரலாக வருகிறது.

Share this post