கமல் - மணிரத்னம் - AR ரஹ்மான்.. ஜாம்பவான்களின் கூட்டணியில் KH234.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர்.
4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம். 350 கோடிகளை கடந்து வசூல் பெற்றது.
இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படம் தற்போது வரை அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு, வரும் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் இந்த இரு ஜாம்பவான்களும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இது குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கமல்ஹாசனின் 234வது திரைப்படமாக உருவாகும் இந்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இசைபுயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ள, இந்த திரைப்படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை, ரெட் ஜெயின் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான தகவலில், கமல்ஹாசன் அஜித்தின் ‘துணிவு’ பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியான நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கமல்ஹாசன் - மணிரத்தினம் காம்போ இணைந்து பணியாற்ற உள்ள தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக உள்ள படம் குறித்த தகவல், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
THE TWO LEGENDS ARE BACK AGAIN AFTER 35 YEARS! 🥁💥
— Red Giant Movies (@RedGiantMovies_) November 6, 2022
PRESENTING #KH234 WRITTEN & DIRECTEd by #ManiRatnam @ikamalhaasan #ManiRatnam @Udhaystalin @arrahman #Mahendran @bagapath @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM pic.twitter.com/pJxldVGMqw