'எத்தன டைம் இந்த சீன் எடுத்தீங்க?' மோசமாக கேள்வி கேட்ட நபர்.. மாளவிகா கொடுத்த நச் பதில் !

Malavika mohanan answers simply to fan who asked indirect question

கல்லூரி படிக்கும் காலம் முதலே விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த மாளவிகா மோஹனன், அதன் மூலம் மலையாள மொழியில் பட்டம் போலே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பின் மூலம் மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.

அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரிஷா போன்றோர் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Malavika mohanan answers simply to fan who asked indirect question

பின்னர், மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு விஜய் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். தனுஷ் ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் OTT தளத்தில் நேரடியாக வெளியான நிலையில், பெரிய அளவிற்கு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

மேலும், யுத்ரா திரைப்படத்தில் நடித்து வரும் மாளவிகா, அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

பிற நடிகைகளை போல போட்டோஷூட் கலாச்சாரத்தை விடாது பின்பற்றி வரும் மாளவிகா, தற்போது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பாலோயர்ஸ் ஏராளம். ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் கேள்விக்கு பதிலளித்து உரையாடி வந்தார் மாளவிகா.

அப்போது, ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனிடம் மாறன் படம் குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதில் அவர், ‘மாறன் படத்தில் படுக்கை அறை காட்சி எத்தனை முறை எடுத்தீர்கள்?’ என கேள்வி கேட்டிருந்தார்.

Malavika mohanan answers simply to fan who asked indirect question

இந்த ட்வீட்டை பார்த்த மாளவிகா மோகனன், ‘உங்கள் மண்டைக்குள் இருப்பது மிக மோசமான இடம்’ என்று பதிலளித்திருக்கிறார். இந்த உரையாடல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Malavika mohanan answers simply to fan who asked indirect question

Share this post