விஜய் - அஜித் மங்காத்தா 2 ட்ரைலர் வீடியோ.. ஷாக்கான பிரேம்ஜி.. வைரலாகும் வீடியோ !

Mankatha 2 trailer video fan made viral on social media premji reacted for the video

தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத உச்ச நட்சத்திர இடத்தை பிடித்துள்ள நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இதில், அஜித் அவர்களுக்கு மாஸ் திரைப்படமாக அமைந்து மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் தான் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் நெகட்டிவ் வேடத்திலும் ஸ்டைலாக தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக பண்ணி இருப்பார்.

அஜித், திரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி, ராய் லட்சுமி, மஹத், ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும் கொண்டாடப்பட்ட திரைப்படம். அப்படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என்பது தான் ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கை.

Mankatha 2 trailer video fan made viral on social media premji reacted for the video

இப்படத்தில் அஜித் விஜய் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது அனைவரும் அறிவோம்.

மேலும், ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு, மங்காத்தா படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த வேடத்தில் விஜய் நடிக்க விரும்பியதாக அவரே கூறி இருந்ததாக கூறினார். இதனை பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபுவிடம் விஜய் தெரிவித்துள்ளார்.

Mankatha 2 trailer video fan made viral on social media premji reacted for the video

மேலும், தான் அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மங்காத்தா 2 எடுக்க விரும்பியதாகவும், அதை மங்காத்தா ஷூட்டிங் நேரத்திலேயே அவர்களிடம் கதை சொன்னதாகவும் கூறி இருக்கிறார். அதனையும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Mankatha 2 trailer video fan made viral on social media premji reacted for the video

இந்நிலையில், ரசிகர் ஒருவர் உண்மையில் விஜய், அஜித் மங்காத்தா 2வில் நடித்தால் எப்படி இருக்கும் என அவர்கள் நடித்த படங்களில் இருந்த காட்சிகளை சேர்த்து ஒரு வீடியோவையே ரிலீஸ் செய்துள்ளனர். மேலும், இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா மற்றும் விஜய் ஜோடியாக சமந்தா இருப்பது போலவும் எடிட் செய்துள்ளனர்.

Mankatha 2 trailer video fan made viral on social media premji reacted for the video

இந்த வீடியோவை யூடியூபில் ரிலீஸ் செய்து அதை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரை டேக் செய்துள்ளார் அந்த ரசிகர். அதற்கு, பிரேம்ஜி ‘ப்ப்பா’ என ரியாக்ட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக, அஜித் - விஜய் ரசிகர்கள் இவர்கள் சேர்ந்து ஒரு போட்டோ வெளியிட மாட்டாங்களா என போட்டோ எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் வைரல் செய்து வழக்கம். ஆனால், இவரோ ஒரு படி மேலே போய் ஒரு படத்திற்கான ட்ரைலரையே ரெடி செய்து வெளியிட்டுள்ளார்.

Share this post