ராம்போ - கண்மணி - கதீஜா Whatsapp உரையாடல்.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ.. செம கிரியேட்டிவிட்டி பா !

Kaathuvaakula rendu kadhal release in ott vignesh shivan released video

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் திரைப்படத்தின் போது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலில் விழவே, தற்போது 7 வருடங்கள் கடந்து இவர்கள் காதல் கதை நீடித்து வருகிறது.

இவர்களது ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

Kaathuvaakula rendu kadhal release in ott vignesh shivan released video

இப்படம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்தில் இருந்து வெளியான 2 2 2, நான் பிழை, டிப்பம் டப்பம் உள்ளிட்ட பாடல்கள் இளசுகளின் ரிங்டோனாக மாறியுள்ளது.

இதில் khatija வாக சமந்தா, கண்மணியாக நயன், மற்றும் ராம்போ வாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ.

பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி திரையரங்குகளில் விசிட் செய்தனர்.

சமந்தா மட்டும் வேறு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அவர் இந்த படத்தின் எந்த கொண்டாடத்திலும் கலந்துகொள்ளவில்லை.

இப்படத்தில் விஜய் சேதுபதியின் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் இருந்தது. முக்கியமாக, நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஒன்று சேரும் காட்சிகள் சிரிப்பு மழை தான்.

காதல், செண்டிமெண்ட், டைலாக் டெலிவரி, பாசம், நகைச்சுவை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். முகம் சுளிக்கும் அளவிற்கு காட்சிகள் எதுவும் வைக்காமல், அழகாக மூவரின் காதல் கதையை கையாண்டுள்ளார்.

இப்படம் ஹவுஸ்புல் காட்சிகள் கொண்டு திரையரங்குகளில் ஓடி வந்த நிலையில், தற்போது படத்தை OTTயில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

வருகிற மே 27ம் தேதி, படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிடுவதாக வீடியோ ஒன்று க்ரியேட்டிவாக இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

Share this post