நயன் உடன் மோதும் சிம்பு.. சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவான 'மஹா' திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் !

Mahaa film to be released on april 28th

நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டதை தொடர்ந்து, சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவான மஹா திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் நடிகை ஹன்சிகாவின் 50-வது படம்

Mahaa film to be released on april 28th

யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் பின்னணி வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Mahaa film to be released on april 28th

மஹா திரைப்படம் போஸ்டர்கள் வெளியாகி சர்ச்சை கிளப்பி வந்த சூழல் நீண்ட காலமாக உருவாகி வந்தது இத்திரைப்படம். இதற்கு காரணம் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தை ஏப்ரல் 28ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Mahaa film to be released on april 28th

இதே நாள், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காதுவாக்குல ரெண்டு காதல் ரிலீஸ் தேதியாக இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ளனர். இதனால், இந்த மோதல் எப்படி அமையப்போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Mahaa film to be released on april 28th

Share this post