லோகேஷ் - ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் மாஸ் திரைப்படம்.. வெளியான பிரம்மாண்ட அப்டேட் !

2019ம் ஆண்டு மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், தீனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் செம ஹிட் அடித்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
முற்றிலும் மாற்றுப்பட்ட கதைகளத்துடன் அக்ஷன் திரைப்படமாக வெளியான கைதி மெகா ஹிட்டான நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிக பிரபலம் அடைந்தார். கைதி விஜய் படமான பிகில் திரைப்படத்துடன் வெளியானலும் 100 கோடியளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
பின்னர், விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ், தற்போது கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். கைதி படத்தின் reference வைத்து மினி லோகேஷ் யூனிவெர்ஸ் ரெடி செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். மேலும், விக்ரம் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை லோகேஷ் பெற்று வருகிறார்.
பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.
படத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூ. 350 கோடியை கடந்தது. அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்தார் கமல் ஹாசன். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்து விஜய்யின் 67வது படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இது குறித்து சூசகமாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.
சமீபத்தில், ரஜினி அவர்களை லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் ஹாசன் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வந்தது. விக்ரம் படத்திற்கு முன்னர், கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் ரஜினிகாந்த் அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன்பின் தான், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து விக்ரம் படம் வெளிவந்தது.
இந்நிலையில், மீண்டும் இந்த மாஸ் கூட்டணி அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்கப்போவதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை கமலுடன் இணைந்து ரஜினியும் தயாரிக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர். விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.