தனுஷ் நடிக்க வேண்டிய ரோலில் நடித்த பகத் பாசில் ! முக்கிய திரைப்படத்தில் தனுஷுக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பு..

Fahadh fasil acted instead of dhanush in popular hit movie

பிரபல மலையாள திரையுலக தயாரிப்பாளரான பாசில் அவர்களின் மகன் பகத் பாசில். இவர் நிறைய மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியில், சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் போன்ற தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Fahadh fasil acted instead of dhanush in popular hit movie

இவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில், புஷ்பா படத்தில் இவரது வில்லத்தனமான கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. கடந்த 2021 டிசம்பர் மாதம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி செம ஹிட் ஆகிய திரைப்படம் புஷ்பா.

Fahadh fasil acted instead of dhanush in popular hit movie

அவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி மற்ற மொழி திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விக்ரம் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அதிலும் முதல் பாதி முழுவதும் ஒரு கதாநாயகனாகவே கதையை சுவாரஸ்யமாக கொண்டு போயிருந்தார்.

Fahadh fasil acted instead of dhanush in popular hit movie

இவர் நடிப்பில் Malayankunju என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், தற்போது இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்துள்ள பகத்பாசில் சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Fahadh fasil acted instead of dhanush in popular hit movie

பகத் பாசில் நடிப்பில் பெரிய வரவேற்பை பெற்ற Kumbalangi Nights திரைப்படத்தில் ஷமி கதாபாத்திரம் நடிகர் தனுஷிற்காக எழுத்தியதாம். ஆனால் அப்படத்தின் பட்ஜெட் காரணமாக தனுஷை தொடர்ப்பு கொள்ளவில்லை என பகத் பாசில் கூறியுள்ளார்.

Share this post