நடித்துக் கொண்டிருக்கும் போதே சுருண்டு விழுந்து உயிரிழந்த நாடக கலைஞர்.. கலங்கவைக்கும் வீடியோ

சத்யமங்கலம் அருகே குப்பந்துறை எனும் கிராமத்தில், மழை வேண்டி ஆண்டுதோறும் இரணியன் நாடகம் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாடகம் மொத்தம் 5 நாட்களுக்கு இரவு நேரத்தில் மட்டும் நடத்தப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் இரணியன் நாடகம் 5 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. குப்பந்துறை கிராமத்தை சேர்ந்த ராஜய்யன் என்னும் 62 வயது முதியவர் தான் இந்த நாடகத்தை முன்னின்று நடத்துவார்.
ராஜய்யன் உள்பட 10க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் இந்த நாடகத்தில் நடித்து வந்தனர். இதன் கடைசி நாளான்று இதில் நாரதர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ராஜய்யன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் பதறிப்போன சக கலைஞர்கள் உடனடியாக அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்தனர்.
அதன்பின்னரும் அவர் பேச்சு மூச்சின்றி இருந்ததால் உடனடியாக அவரை சத்யமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ராஜய்யனின் மறைவு அவருடன் பணியாற்றியவர்களுக்கும், அவருடையை குடும்பத்தினருக்கும் பேரிழப்பாக அமைந்தது.
நாடகத்தின் மீது உயிராக இருந்த ராஜய்யன், நடித்துக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்து வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k3pphCPzxnFvIbya8NGமேடையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே உயிர்விட்ட நாடகக் கலைஞர் - வீடியோ!#Erode | #Sathyamangalam | #nadagakalaignar | #death pic.twitter.com/BoL42JKE16
— Gowtham Natarajan (@GowthamNatara21) July 18, 2022