சக்ஸஸ் மீட் முடிந்தவுடன் லியோ படக்குழுவினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அப்போ இனி அவ்ளோ தானா..?
ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின், கவுதம் மேனன், சாண்டி, மடோனா செபாஸ்டியன், பிக்பாஸ் ஜனனி, மேத்யூ தாமஸ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து ரிலீஸ் ஆன ‘லியோ’ பாக்ஸ் ஆபிஸை மிரட்டி வருகிறது. இப்படம் 10 நாளில் ரூ.540 கோடி வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விஜய் உட்பட படத்தில் பணியாற்றிய பல நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் பங்கேற்றனர்.
இப்படி படக்குழுவினர் ஹாப்பியாக இருந்து வந்த சமயம், இதே நிலை தொடர்ந்தால், ஜெயிலர் பட ரூ.650 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை லியோ முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது திடீர் டுவிஸ்ட் ஆக லியோ படத்தின் HD பிரிண்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது. படம் ரிலீசாகி 15 நாட்களில் லியோ HD பிரிண்ட் வெளியாகி உள்ளது அப்படத்தின் வசூலை பெரியளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனைக்கு கிட்ட கூட நெருங்க முடியாத சூழல் லியோ படத்திற்கு உருவாகி உள்ளது.
இந்த சம்பவம் படக்குழுவினருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை இணையத்தில் இருந்து நீக்கும் வேலைகளில் படக்குழு இறங்கி உள்ளது. லியோ திரைப்படம் வருகிற 17ந் தேதி ஓடிடியில் ரிலீசாகும் என்பது குறிப்பிடத்தக்கது.