ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா? லியோ Hyena காட்சி குறித்து வெளியான தகவல்..!

leo-hyena-scene-huge-budget-details

ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆனதில் இருந்தே தளபதி விஜய்யின் ‘லியோ’ பாக்ஸ் ஆபிஸை மிரட்டி வருகிறது. மேலும், படத்தின் இந்திய வசூல் நிலவரம் குறித்த புதிய தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

leo-hyena-scene-huge-budget-details

தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இந்திய மற்றும் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. நேற்றைய தினம் உலகம் முழுவதும் இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக வெளியான செய்தி ரசிகர்கள் அனைவரையும் கிறங்கடித்தது.

leo-hyena-scene-huge-budget-details

தமிழகத்தில் அக்டோபர் 23ஆம் தேதி வசூல் நிலவரப்படி ‘லியோ’ படம் ரூ.26 கோடி வசூல் செய்துள்ளது. கேரளாவில் ரூ.7 கோடியும், கர்நாடகாவில் ரூ.3 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.2.50 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

leo-hyena-scene-huge-budget-details

லோகேஷ் கனகராஜின் LCU ரிலீஸ் லியோ ஒருபுறம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடையே வெற்றி பெற்றது. லோகேஷ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி எழுதிய லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி, கவுதம் மேனன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

leo-hyena-scene-huge-budget-details

லியோ ஒரே நாளில் 148.5 கோடி வசூலித்த நிலையில் 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இதில் வரும் Hyena காட்சி தத்ரூபமாக VFXல் உருவாக்கப்பட்டு இருந்ததை படம் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் பாராட்டி இருந்தனர். அந்த காட்சியை உருவாக்க மொத்தம் 15 கோடி ரூபாயை படக்குழு செலவு செய்திருக்கிறது தகவல் வெளியாகி இருக்கிறது.

Share this post