உழைப்பு… திறமைக்கு கிடைத்த பலன் – இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின், கவுதம் மேனன், சாண்டி, மடோனா செபாஸ்டியன், பிக்பாஸ் ஜனனி, மேத்யூ தாமஸ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து ரிலீஸ் ஆன ‘லியோ’ பாக்ஸ் ஆபிஸை மிரட்டி வருகிறது. இப்படம் 16 நாளில் ரூ.553 கோடி வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விஜய் உட்பட படத்தில் பணியாற்றிய பல நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் பங்கேற்றனர்.
இப்படம் தொடர்ந்து பல சாதனைகளை செய்து வரும் நிலையில், லோகேஷ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் முழு சொத்து மதிப்பு ரூபாய் நாற்பது கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இவர் தற்போது இயக்க உள்ள தலைவர் 171 படத்திற்காக ரூபாய் 45 கோடி சம்பளமாக வாங்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.