தற்கொலைக்கு துணிந்த இமான்? உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர்..!

சில நாட்களுக்கு முன்பு லியோ படம் பற்றிய பரபரப்பு பறந்து கொண்டிருந்த போது, இமான் திடீரென ட்ரெண்ட் ஆனார். பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் யதார்த்தமாக பேசினார்.
தொகுப்பாளர் சிவகார்த்திகேயனின் படத்திற்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டார். அதற்கு இமானின் பதில் இன்றுவரை ட்ரெண்டிங்கில் உள்ளது.
சிவகார்த்திகேயனுடன் பணிபுரிவது கனவிலும் நினைக்காத ஒன்று என்கிறார் இமான். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அதனால் என்னால் எதுவும் சொல்ல முடியாது.
இனி அடுத்த ஜென்மத்தில் நான் இமானாகவும் அவர் சிவகார்த்திகேயனாகவும் பிறந்தால் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது. அது இந்த ஜென்மத்தில் நடக்காது என்றார். இதன் மூலம் இமானுக்கும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டதற்கு சிவகார்த்திகேயனே காரணம் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பல வாக்குவாதம் செய்து வந்த நிலையில், முன்னாள் மனைவியால் இமான் தற்கொலை செய்யும் முயற்சி செய்திருக்கிறார் என்று உண்மையை பிரபல பத்திரிக்கையாளரான வித்தகன் தற்போது தெரிவித்திருக்கிறார்.