சிவாஜி.. எம்.ஜி.ஆர்.. ரஜினி.. கமல்.. டீசருக்கே டீசர்.. விஷாலின் லத்தி படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ !

Laththi movie antecedent teaser video getting viral on social media

பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Laththi movie antecedent teaser video getting viral on social media

இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார். இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

Laththi movie antecedent teaser video getting viral on social media

நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

Laththi movie antecedent teaser video getting viral on social media

தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Laththi movie antecedent teaser video getting viral on social media

லத்தி இறுதி கட்ட படப்பிடிப்பு சண்டை காட்சியில் அவருக்கு நிஜமாகவே காலில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கீழே விழுந்து துடிதுடித்ததால், அவரால் மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலையில், உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.

Laththi movie antecedent teaser video getting viral on social media

இதனால், இவ்வளவு மெனக்கெட்டு விஷால் ஒரு படத்திற்காக நடித்திருப்பதால் அப்படத்தின் மீதான ஆர்வம் எகிறியுள்ளது. லத்தி படத்தின் டீஸருக்கே ஒரு டீஸர் வீடியோவை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. அதில், டீசர் வீடியோ வரும் 24ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.

Share this post