'எப்போ தான் இந்த சீரியல முடிக்க போறீங்க.. ப்ளீஸ் பாக்க முடியல' ரசிகருக்கு கிளைமாக்ஸ் சொன்ன பாரதி கண்ணம்மா நடிகை

Farina azad says about bharathi kannamma serial ending to the fans question

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் இருந்து வந்தது. இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

Farina azad says about bharathi kannamma serial ending to the fans question

டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது.

Farina azad says about bharathi kannamma serial ending to the fans question

இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Farina azad says about bharathi kannamma serial ending to the fans question

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 850 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த இந்த தொடர், தற்போது மோசமான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. ஒரே கதையை சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஜவ்வு போல இழுத்து வருவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Farina azad says about bharathi kannamma serial ending to the fans question

இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் வெண்பாவாக நடிக்கும் ஃபரினாவிடம் “BK சீரியல் எப்போ முடியும்.. தயவுசெஞ்சு சீக்கிரமா முடிங்க, பாக்க முடியல” என இன்ஸ்டாகிராமில் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளிக்கும் வகையில், “சரிங்க.. புரியுது. அந்த DNA டெஸ்ட்ட எடுத்துடுறோம்” என கூறி இருக்கிறார்.

Farina azad says about bharathi kannamma serial ending to the fans question

Share this post