ரத்த காயங்களுடன் அஜித்.. ரசிகர்களை அதிர்ச்சியூட்டிய இணையத்தில் வெளியான புகைப்படங்கள் !

Latest ajith stills from valimai movie making goes viral on internet

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹுமா போன்ற பலர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இப்படத்தில் போதை பொருள், பைக் ரேஸிங், செண்டிமெண்ட் காட்சிகள் என விருந்தையே ரசிகர்களுக்கு படைத்துள்ளார் இயக்குனர்.

இதன் மேக்கிங் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வந்தது. நடிகர் அஜித் இதுவரை உடலில் 15 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டவர். அதுவும் முதுகில் இவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ரிஸ்க்கான சண்டை காட்சிகள், பைக் ஓட்டும் காட்சிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Latest ajith stills from valimai movie making goes viral on internet

வலிமை படத்தில் ஆபத்தான பைக் சேஸிங் காட்சிகளில் டூப் போடாமல் அஜித் நடித்த போது, பைக் வீலிங் செய்து கீழே விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் வலிமை மேக்கிங் வீடியோவிலும் இடம் பெற்றிருந்தது.

Latest ajith stills from valimai movie making goes viral on internet

இந்நிலையில், இந்த காட்சிகளுக்கு பின் இவருக்கு காயம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Latest ajith stills from valimai movie making goes viral on internet

Share this post