என் மகன் கதைய திருடி தான் KGF 2 எடுத்துருக்காங்க.. வெளியான புகைப்படம்.. இதுதான் உண்மையான KGF-ஆ..? அதிர்ச்சியில் படக்குழுவினர்..

Lady accuses kgf team for stealing his son story

2018ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பாராத அளவிற்கு வரவேற்பை பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் மொழிகள் கடந்த பான் இந்தியா லெவல் வெற்றி பெற்றது.

Lady accuses kgf team for stealing his son story

இதனால், இப்படத்தின் 2ம் பாகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த வகையில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி கே ஜி எஃப் 2 கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Lady accuses kgf team for stealing his son story

தங்க சுரங்கத்தில் அடிமையாக வேலை செய்யும் மக்கள், அவர்களது வாழ்க்கை, தாயின் பாசம், காதல் என அனைத்து பரிமாணங்ககையும் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

Lady accuses kgf team for stealing his son story

இந்நிலையில் திடீரென, ஒரு பெண் இது எனது மகனின் கதை என கூறி குற்றம் சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அப்பெண் கூறியதாவது எனது மகன் கேஜிஎப் தங்க சுரங்கத்தில் வேலை பார்த்ததாகவும், அப்போது தங்க சுரங்கத்தில் இருந்து நகைகளை திருடி ஏழை மக்களுக்கு உதவி செய்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டு 1996ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Lady accuses kgf team for stealing his son story

மேலும் எனது மகனின் கதையை எனது அனுமதி இல்லாமல் படக்குழுவினர் படமெடுத்து உள்ளதாகவும், எனது மகனை கெட்டவனாக சித்தரித்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தகவல் படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this post