யோவ் ப்ளீஸ் உனக்கு புண்ணியமா போகும்.. எலான் மஸ்க்கிற்காக ஸ்டேட்டஸ் வைத்த இயக்குனர் கார்த்திக் நரேன்

Karthik naren status for elon musk getting viral releasing naragasooran

துருவங்கள் 16திரைப்படத்தின் மூலம் இளம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இப்படம் எதிர்பாராத அளவிற்கு வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Karthik naren status for elon musk getting viral releasing naragasooran

இதனைத் தொடர்ந்து, அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப், இந்திரஜித் உள்ளிட்டோர் நடிப்பில் நரகாசூரன் படத்தை இயக்கினார். ஆனால், இப்படம் தற்போது வரை வெளியாகவில்லை.

Karthik naren status for elon musk getting viral releasing naragasooran

இதன் பின்னர், தனுஷ், மாளவிகா மோஹனன் நடிப்பில் மாறன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும், மாஃபியா, நவரசா - அக்னி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

Karthik naren status for elon musk getting viral releasing naragasooran

தற்போது, நிறங்கள் மூன்று என அதர்வா, சரத்குமார், ரஹ்மான் உள்ளிட்டோரை வைத்து படம் இயக்கி வருகிறார். இதுமட்டுமின்றி, நிறைய குறும்படங்களை இயக்கியுள்ளார்.

Karthik naren status for elon musk getting viral releasing naragasooran

தற்போது, ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் பேச்சு அதிகம் பரவி வரும் நிலையில், தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “அப்படியே யோ எலான் மஸ்க் ப்ளீஸ் நரகாசூரன் படத்தையும் வாங்கி ரிலீஸ் பண்ணுயா.. உனக்கு புண்ணியமா போகும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Karthik naren status for elon musk getting viral releasing naragasooran

Share this post