மணிமேகலையை தொடர்ந்து CWC - 4ல் இருந்து வெளியேறும் மக்கள் பேவரைட் கோமாளி? Viral Tweet..!

சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.
3 சீசன்கள் முடிவடைந்த நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி. இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட். முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி, மூன்றாவது சீசனில் ஸ்ருஷ்டிகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
தற்போது, குக் வித் கோமாளி 4வது சீசன் தொடங்கி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதுவரை கோமாளியாக பங்கேற்று வந்த சிவாங்கி இந்த முறை குக்காக என்ட்ரி கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல், சிங்கப்பூர் தீபன், ஜிபி முத்து ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.
ஆனால் சமீபத்தில் இந்த ஷோவில் முதல் சீசனில் இருந்து கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை வெளியேறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. தற்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வந்த குரேஷி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் விதமாக ட்விட் ஒன்றை பதிவிட்டு பின்னர் டெலீட் செய்துவிட்டார்.
பின் உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு என்று மீண்டும் ஒரு ட்விட் செய்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலருமே குழப்பத்தில் உள்ளனர். உண்மையாலுமே குரேசி நிகழ்ச்சி விட்டு வெளியேறப் போகிறாரா? இல்லை தவறுதலாக பதிவிட்டாரா? என்பது தெரியவில்லை.