அதிகாரப்பூர்வமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்த ஐஸ்வர்யா..? சினிமா பிரபலத்தின் வைரல் ட்வீட்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் பிரபல நடிகர் தனுஷ் அவர்களது மனைவியும் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
தற்போது, சமீப காலமாக, கோவம் குறைந்து மீண்டும் தனுஷுடன் சேரும் முடிவில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்பட்டாலும், இருவர் தரப்பில் இருந்தும் இது வரை எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது.
அதன் பின்னர் இவர்களின் விவாகரத்து குறித்து இரு தரப்பினரும் எந்தவித கருத்தையும் வெளிகாட்டாமல் இருந்து வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன், ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அப்போது சமரச பேச்சுவார்த்தையில் விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது. ஆனால், அது குறித்த எந்த ஒரு அறிகுறியும் தற்போது வரை இல்லை. இந்நிலையில், சமீபத்தில் தன் பெற்றோருக்காக 150 கோடியில் போயஸ் கார்டன் வீட்டினை பரிசாக கொடுத்து கிரஹபிரவேசம் செய்திருந்தார்.
இதற்கிடையில் தனுஷ் விவாகரத்தாகி ஒரு வருடமாகிய நிலையில் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வந்தது. கடந்த சில மாதங்களாக, இவர்கள் இருவரின் விவாகரத்து குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது சினிமா பிரபலம் புதிய கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ட்விட்டர் பிரபலமும் சென்சார்டு போர்டு மெம்பரும் சினிமா பிரபலமும் ஆன உமர் சந்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தனுஷும் ஐஸ்வர்யாவும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்திற்கு சிவில் கோர்ட்டில் விண்ணப்பித்திருக்கின்றனர். தனுஷ் வேறு ஒரு பெண்ணிற்காக ஐஸ்வர்யாவை ஏமாற்றிவிட்டார்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறிய இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.