படம் இன்னும் தாறுமாறா இருந்திருக்கும்…அலைகள் ஒய்வதில்லை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ இவர் தான்!
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் சுரேஷ். 300க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பன்மொழி படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார்.
80களில் கனவு நாயகனாக இருந்தவர் சுரேஷ். அவர் அழகான ஹீரோ என்று அனைவராலும் பாராட்டப்பட்டார். டெக்னீஷியனாக வந்து நடன இயக்குனராக மாறி கதாநாயகனாக அடியெடுத்து வைத்தார்.
தற்போது இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தந்தை, தொழிலதிபர், வில்லன் என பல்வேறு வேடங்களிலும் நடித்து வருகிறார். தந்தையின் வேலை காரணமாக சுரேஷ் குடும்பத்துடன் சென்னை வந்தார். அப்பா தேவர் பிலிம்ஸில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். பள்ளி விடுமுறையில் சுரேஷ் தனது தந்தையுடன் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையால், இளம் வயதிலேயே டெக்னீஷியனாக சினிமா துறையில் நுழைந்தார். நடனப் பள்ளிக்குச் சென்று சம்பத் மாஸ்டரிடம் திரைப்படத் துறைக்காக நடனம் கற்றுக்கொண்டார். குடும்பச் சூழலை உணர்ந்து, 16 வயதில் உதவி இயக்குநராக, டெக்னீஷியனாக, நடன இயக்குனராக படிப்படியாக உயர்ந்தார்.
நண்பர்களின் ஆலோசனையின் பேரில் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். அப்போது இயக்குநர் ஸ்ரீதர் புதுமுகங்களைத் தேடி வருவதாகக் கேள்விப்பட்டார். அங்கு சென்றபோது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 1981ல் சந்தானபாரதியும் பி.வாசுவும் இணைந்து பாரதி வாசு என்ற பெயரில் பன்னீர் புஷ்பங்கள் படத்தை இயக்கினர்.
சுரேஷுக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்து, பாரதிராஜாவின் அலைகள் ஒய்வதில்லை படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடித்ததால் அந்த வாய்ப்பு நழுவியது. அதன் பிறகு அந்த படம் கார்த்திக்கிற்கு சென்றது.
1990ல் பாடகி அனிதாவை காதலித்தார். இவர்களுக்கு நிகில் சுரேஷ் என்ற மகன் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்துக்கு வழிவகுத்தது. அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்காவில் குடியேறினார். பின்னர், எழுத்தாளர் ராஜஸ்ரீயை மணந்தார்.