KH234 படத்தின் First Look மற்றும் டீசர் பற்றிய Update..!
கமல்ஹாசனும் மணிரத்னமும் முதன்முறையாக நாயகன் படத்தில் இணைந்தனர். அந்த படம் சூப்பர் ஹிட்டான பிறகும், அதன் பிறகு எந்த படத்திலும் இணையவில்லை. தற்போது கமலின் KH234வது படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் டீசர் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கமல்ஹாசன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
தான் நடிக்கும் மணிரத்னத்தின் KH234 படத்தின் அறிமுக டீசர் நவம்பர் 7 ஆம் தேதி உங்கள் பார்வைக்கு வரும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். அதன்படி கமலின் KH234வது படத்தின் டீசர் அவரது பிறந்தநாளில் வெளியாகுவது உறுதியாகி உள்ளது.
Share this post