மைனா நந்தினியை குறிப்பிட்டு நன்றி சொன்ன நடிகர் கார்த்தி.. என்ன காரணம் இதோ!
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மைனா நந்தினி. இதனைத் தொடர்ந்து, பல விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, உள்ளிட்ட பல சீரியல்கள் இவருக்கு பிரபலம் பெற்று தந்தது. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் அதில் இவர் பெயர் மைனா, அதே பெயரே இவரது அடைமொழியாக மாறிவிட்டது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, காஞ்சனா 3, வம்சம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ரோமியோ ஜூலியட் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான, விக்ரம், விருமன், சர்தார் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் கார்த்தி இவருக்கு நன்றி கூறியுள்ளது பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்தார் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் நடிகை மைனாவை குறிப்பிட்டு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் கார்த்தி. இந்தப் படத்தில் நாடக நடிகராக நடித்துள்ள கார்த்தி முருகன் வேடமும் அணிந்திருந்தார்.
அப்போது அந்த நாடகத்தில் தான் கார்த்தி ஜோடியாக மைனா நந்தினி ஆடியிருப்பார் முருகன் கதாபாத்திரம் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருபவர் இவர்களுடைய தந்தை சிவகுமார்தான். சமீபத்தில் தான் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யா முருகன் வேடம் அணிந்து ஒரு பாடலில் நடித்திருப்பார். இந்த மூன்று முருகன்களில் எந்த முருகன் அழகானவர் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நான் மட்டுமல்ல தமிழ்நாடே சொல்லும் அப்பாதான் அழகான முருகர் என்று கார்த்தி பதிலளித்துள்ளார்.
விருமன் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்த மைனா சர்தார் திரைப்படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு, நாங்கள் கேட்டுக் கொண்டதால் ஆடிக் கொடுத்தார். மைனாவின் அந்த அன்புக்கு நன்றி என்று கார்த்தி மைனாவை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.