Viral Video: 'சன்னி லியோனா? அது யாரு?' மேடையில் அவரை தெரியாதுன்னு சொன்ன தமிழ் பிரபலம்.. வெளியான கலகலப்பு வீடியோ!
பிரபல பார்ன் நடிகையான சன்னி லியோன் அவர்களை, யாருமே தெரியாது என சொல்ல முடியாது. கரெஞ்சித் கவுர் என்பது இவரது உண்மையான பெயர். நிறைய பார்ன் திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். எவ்வளவு பேர் வந்து போனாலும் சன்னி லியோனுக்கு இருக்கும் மாஸ், தற்போது வரை குறைந்ததில்லை.
இதுமட்டுன்றி, சில தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தற்போது, திரைப்படங்கள், பிசினஸ், குடும்பம் என பிசியாக இருந்து வருகிறார். டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 1 பெண் குழந்தையை தத்தெடுத்ததுடன், இரட்டை ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்தனர்.
விரைவில் இவர் நடிப்பில் ஓ மை கோஸ்ட் திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது. இயக்குனர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், தர்ஷா குப்தா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஓ மை கோஸ்ட். இப்படத்தில் நடிகை சன்னி லியோன் ஹீரோயினியாக நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. யோகி பாபு, சதிஷ், ரமேஷ் திலக், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செம பிரம்மாண்டமாக நடந்தது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சன்னி லியோன் குறித்து ஜி பி முத்து பேசியுள்ளார். அப்போது, ‘இது என்னுடைய முதல் படம் இந்த படத்தில் நடிக்க முதலில் பயந்தேன்.
ஆனால் இயக்குனர் பயப்படாதீங்க கொடுக்குறதை மட்டும் நடிங்க சொன்னாரு. ரொம்ப சந்தோஷமா நடிச்சிருக்கேன் என கூறினார். மேலும் பேசிய அவர் இந்த படத்துல சன்னி லியோன் நடிக்கிறாங்கன்னு சொன்னாங்க. சன்னி லியோன்னா எனக்கு யாருன்னு தெரியாது. ஆனா நிறைய கமெண்ட்ஸ் வரும் உண்மையா எனக்கு சன்னி லியோன் தெரியவே தெரியாது. அப்புறம் இதுதான் சன்னிலியோன்னு சொல்லி சில படத்தையெல்லாம் காமிச்சாங்க என சொல்ல ரசிகர்கள் மத்தியில் கரகோஷம் எழுந்தது.
Thalaivare 🤣🤣🤣#GPMuthu Speech at #OhMyGhost Audio Launch..
— VCD (@VCDtweets) November 2, 2022
Full 8 Mins Video.. STRESS BUSTER 🤣👌
pic.twitter.com/AXQze4OL5r