பள்ளி பாட புத்தகத்தில் புனித் ராஜ்குமார் வாழ்க்கை வரலாறு - புனித் அவர்களின் சமூகசேவை குணத்தை பெருமைப்படுத்தும் கர்நாடக அரசு

Karnataka government plans to add puneeth life history in school syllabus

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் மாதம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவு தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமாவை தாண்டி புனித் ராஜ்குமார் பல பொதுநல சேவைகளில் ஈடுபட்டு வந்த காரணத்தினாலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். பல ஏழைகளுக்கு உதவிகள் செய்ததோடு 119 கோசாலைகள் 16 முதியோர் இல்லங்களை நடத்தி வந்துள்ளார்.

மேலும், பொருளாதாரத்தில் பின் தங்கிய 4 ஆயிரத்து 800 மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி தந்து வந்தார். தனது சம்பளத்தில் பெரும் பகுதியை சமூக சேவை பணிகளுக்கு செலவிட்டு வந்தார்.

புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை மற்றும் அவரது சமூகசேவை குணத்தை பெருமைப்படுத்தும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாக வைக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக கர்நாடக கல்வி மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்து உள்ளார்.

4 அல்லது 5ம் வகுப்பு மாணவர்களின் பாட புத்தகத்தில் புனித் ராஜ்குமார் வாழ்க்கை பற்றிய அத்தியாயம் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post