மாமனிதன் ரிலீஸ் தேதி மாற்றம்.. படக்குழுவினர் அறிவிப்பு !

Mamanithan release date has been postponed from may 6 to may 20

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற கிராமப்புற திரைப்படங்களை ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இயக்கியவர் சீனு ராமசாமி. தற்போது, நடிகர் விஜய் சேதுபதியுடன் 4-வது முறையாக இணைந்து உருவாக்கப்பட்ட திரைப்படம் மாமனிதன்.

Mamanithan release date has been postponed from may 6 to may 20

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். மேலும் இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டே மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஆர்.கே.சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார். அதன்படி வருகிற மே மாதம் 6ம் தேதி மாமனிதன் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்திருந்தனர்.

Mamanithan release date has been postponed from may 6 to may 20

இந்நிலையில், தற்போது மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டு மே 6ம் தேதிக்கு பதில் மே 20ம் தேதி வெளியிடப்படும் எனவும், தனது நடிப்பில் மே 20ம் தேதி ரிலீசாக இருந்த விசித்திரன் படம் மே 6ம் தேதி வெளியிடப்படும் என ஆர்.கே.சுரேஷ் அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.

Share this post