காஜல் நடித்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கம் ? அதிருப்தியில் காஜல் அகர்வால் !

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். துப்பாக்கி, மாற்றான், விவேகம், மாரி 1 போன்ற திரைப்படங்களில் விஜய், அஜித், சூர்யா என டாப் தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தார்.
திரைப்படங்கள் கைவசம் வைத்து நடித்து வரும் சமயத்திலேயே, 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வால், கவுதம் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும், தாம் கர்ப்பமாக இருப்பதை தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் அறிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆண் குழந்தை அவர்களுக்கு பிறந்தது. சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சார்யா படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share this post