அப்போ விஜய்யும் அப்படி தானா..? - சர்ச்சையாக வெடித்த ஜோதிகாவின் பேட்டி வீடியோ..!

jothika opens up about acting with heroes and vijay is not in the list

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா என அணைத்து டாப் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தவர். இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வெகு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

jothika opens up about acting with heroes and vijay is not in the list

இந்நிலையில், நடிகை ஜோதிகாவின் பேட்டி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருவார்கள். கதைக்காகவும், நடிகர்கள் மேல் இருக்கும் மரியாதையால் அப்படி நெருக்கமாக நடிக்கவும் ஒப்புக்கொண்டு நடிப்பார்கள்.

சமீபகாலமாக சினிமா துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் பாலியல் குற்றசாட்டுகள், சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களுக்கு கூட தற்போது அதிகம் குரல் கொடுத்து பேசி வருகின்றனர்.

அந்த வகையில், ஜோதிகாவுடன் ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, “எல்லா ஹீரோஸ்களுடன் வேலை செய்ய comfortable இருக்காது. என்னுடைய கேரியரில் அஜித், சூர்யா, மாதவன் போன்ற நடிகர்களுடன் நான் comfortable-ஆக இருந்திருக்கிறேன்” என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.

jothika opens up about acting with heroes and vijay is not in the list

இதில் விஜய் பெயரை இவர் கூறாதது பெரிய பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. நடிகர் விஜயுடன் குஷி, திருமலை என ஹிட் படங்களில் நடித்துள்ள இவர், ஏன் அவர் பெயரை குறிப்பிடவில்லை என கேட்டு அப்போ விஜயும் சில நடிகர்கள் போல தானா..? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this post