தனுஷ் – சிவகார்த்திகேயன் இடையே விரிசல் வந்தது.. இந்த படத்தில் தானாம்.. இப்படி செய்யலாமா..
விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார். இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர், டான் போன்ற தொடர் வெற்றிப்படங்கள் மூலம் பிரபலம் அடைந்தார். தற்போது, SK21 மற்றும் அயலான் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தனுஷ் தயாரிப்பில் இவர் நடித்து வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் மூலமே தமிழ் திரையுலகில் இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மேலும், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நல்ல நட்புடன் பழகி வந்தவர்கள். திடீரென இவர்கள் உறவில் விரிசல் வந்ததற்கான காரணம் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
காக்கி சட்டை பட ப்ரஸ் மீட்டில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. அதனைப்பற்றி, சிவகார்த்திகேயனிடம் கேட்க சில காரணங்களை சொல்லி தப்பித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயனை தவிர்த்து விட்டு தனுஷ் மட்டும் கலந்து கொண்டார். இதனை பார்த்த பலரும் புரிந்துகொண்டனர்.
இப்படி தொடங்கிய சிறிய விரிசல் நாளடைவில் பெரிய விரிசலாக மாறி சிவகார்த்திகேயன் ஒரு ட்ராக்கிலும், தனுஷ் மற்றொரு டிராக்கிலும் உள்ளனர்.