சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' மேக்கிங் வீடியோ.. தலைவரோட ஸ்டைலும் மாஸும் குறையவே இல்ல..
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
ஜெயிலர் படம் இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதை எனவும், அதனால் தான் ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிறையில் தான் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், விரைவில் ஷூட்டிங் பணிகளை முடித்து, தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யோகி பாபு, தரமணி நடிகர் வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயக், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், ஷூட்டிங் ஸ்பாட் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ரஜினிகாந்த் இந்த படத்தில் செம்ம மாஸாக ஸ்டைலாக நடித்து எடுக்கப்பட்ட சில சீன்கள் வீடியோ மூலம் தெரிகிறது. இந்த மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்களால் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Here’s a glimpse of Superstar @rajinikanth from the sets of #Jailer 🤩
— Sun Pictures (@sunpictures) November 18, 2022
@Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/3EtAap0FUs