ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நயன் நடிக்கும் 81வது படம்.. போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். சரியாக விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சர்ச்சை எழவே, தாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021ம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் சாட்சிகளை விசாரணையில் சமர்ப்பித்தனர்.
நேற்று, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது 38வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்து மழை பொழிந்து வந்தனர். மேலும், திருமணம் ஆகி குழந்தை பெற்று இவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால், நயன்தாரா கணவர் மற்றும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் கனெக்ட் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. மேலும், நயன்தாரா அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. நயன் - விக்கியின் சொந்த நிறுவனமான, ‘ரௌடி பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில், அடுத்ததாக நயன்தாரா நடிக்க உள்ள 81வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரௌடி பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தை, எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற தரமான படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இவரின் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் கதை அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக எதிர்நீச்சல் படத்தில் சாந்தி கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Rowdy Pictures proudly presents #NT81 starring the Lady Super Star #Nayanthara ⭐
— Rowdy Pictures (@Rowdy_Pictures) November 18, 2022
To be Directed by @Dir_dsk 🎬@VigneshShivN | @DoneChannel1#HBDNayanthara #HBDLadySuperstarNayanthara pic.twitter.com/tPygfyqZyI