ஷூட்டிங்கின் போது ஒரே ரூமில் பிரபல நடிகையுடன் கையும் களவுமாக சிக்கிய ஜெய்.. தீயாக பரவும் தகவல்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக 2007ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பின்னர், இவர் நடித்த ‘அங்காடி தெரு’ படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆனார். சிறிய இடைவெளிக்கு பின்னர் சிங்கம் 2 படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் குத்தாட்டம் போட்டார்.
பின்னர், நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிய அஞ்சலி, நாடோடிகள் 2, பாவக்கதைகள், நிசப்தம், நவரசா உள்ளிட்ட படங்கள் மற்றும் சீரிஸ்களில் நடித்தார். இதனிடையே, நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருக்கிறது என்று பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
அப்போது இருவருக்கும் ரகசிய காதல் இருப்பதாகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் தான் அஞ்சலி வாய்ப்பில்லாமல் வாழ்க்கை பாழானதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி சேர்ந்து நடிப்பில் வெளியான பலூன் படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த சம்பவம் குறித்து செய்திகள் சிலது வெளியாகியுள்ளது.
அப்படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் ஊட்டியில் தான் நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென அஞ்சலிக்கு வயிறு வலி வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது படக்குழுவினர் காரை எடுத்து வரவே, ஜெய் நானே கூட்டிக்கொண்டு போகிறேன் என கூறிவிட்டு அந்த நாள் முழுவதும் திரும்ப வரவில்லையாம்.
இதனால் அந்த ஒருநாள் ஷூட் முழுவதும் ரத்து செய்துள்ளனர். இந்நிலையில், ஓட்டலில் ஜெய், அஞ்சலிக்கு தனித்தனியாக ரூம் புக் செய்திருந்தனர். ஆனால் ஜெய் அவர் ரூமில் இல்லாமல் அஞ்சலி ரூமிலேயே இருந்துள்ளார். ரூம் பூட்டியே இருந்ததாகவும் பிரபல பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.