இனிமேல் நடிக்க போவதில்லை..? பகிரங்கமாக அதிர்ச்சி முடிவை அறிவித்த மாளவிகா மோகனன்..!

malavika mohanan planned to act only in important roles only

கல்லூரி படிக்கும் காலம் முதலே விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த மாளவிகா மோஹனன், அதன் மூலம் மலையாள மொழியில் பட்டம் போலே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பின் மூலம் மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.

malavika mohanan planned to act only in important roles only

அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரிஷா போன்றோர் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு விஜய் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு, தனுஷ் ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, யுத்ரா, தங்கலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிற நடிகைகளை போல போட்டோஷூட் கலாச்சாரத்தை விடாது பின்பற்றி வரும் மாளவிகா, சமூக வலைத்தளங்களில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், மாளவிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 500 கோடி வசூலிக்கும் பெரிய படமாக இருந்தாலும் என் ரோலுக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அதில் நடிக்கப் போவதில்லை.

malavika mohanan planned to act only in important roles only

இனிமேல் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். பிரம்மாண்டமாக ஓடி வசூலை குவிக்கும் படங்கள் என்றாலும் அதில் என் கதாபாத்திரத்தை யாரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள் என கூறியுள்ளார்.

Share this post