"எனக்கு உன் 'Thanks' தேவையில்ல".. நன்றி தெரிவித்த அனிருத்திற்கு பிரபல டாப் நடிகர் பதில்.. Viral Tweet..!

i dont want thank you popular actor response for anirudh getting viral on twitter

பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். 2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே மிக பிரபலம் அடைந்தவர்.

3 படத்தில் இடம்பெற்ற “Why This Kolaveri Di” பாடல் செம வைரல் ஆகி யூடியூப் தளத்தில் ரெகார்ட் பிரேக் செய்தது. இதனைத் தொடர்ந்து, பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

i dont want thank you popular actor response for anirudh getting viral on twitter

மேலும், வேறு இசையமைப்பாளர் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். அந்த பாடல்கள் செம ஹிட் ஆகி அதற்கும் பல விருதுகளை குவித்துள்ளார். பல மியூசிக் ஆல்பம்களையும் வெளியிட்டுள்ளார்.

அஜித், விஜய், கமல், ரஜினி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போதைய இளம் தலைமுறையினர்களுக்கு பேவரைட் ஆக மாறியுள்ளார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து, அனிருத் அவர்கள் லியோ, சியான் 60, இந்தியன் 2, அயலான், ஜெயிலர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். ஜவான் படத்தின் மூலம் இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

ஜவான் திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று பிரபலங்களின் கவனங்களை ஈர்த்து வரும் நிலையில், தற்போது அல்லு அர்ஜுனும் அப்படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

i dont want thank you popular actor response for anirudh getting viral on twitter

அதில், நடிகர் - நடிகைகளையும், அனிருத்தையும் பாராட்டி பதிவிட்டுள்ளார். இதற்கு அனிருத் பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி தெரிவித்த அனிரூத்திடம் நன்றி எல்லாம் வேண்டாம், எனக்கும் நல்ல பாட்டுகள் வேண்டும் என பதிலளித்துள்ளார். இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

i dont want thank you popular actor response for anirudh getting viral on twitter

Share this post