பேட்டியின் நடுவே லக்ஷ்மி ராமகிருஷ்ணன் காலில் விழுந்து கதறிய நடிகை.. வைரல் வீடியோ..!
மலையாள மொழியின் மூலம் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன். தமிழில் பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், நாடோடிகள், பொய் சொல்ல போறோம், வேட்டைக்காரன், ஆதவன், நான் மஹான் அல்ல என பல திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.
நடிகையாகவும், இயக்குனராகவும் இவர் பிரபலம் அடைந்தாலும், இவரை சொன்னாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியும் அதில் இவர் பேசும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ டயலாக்கும் தான்.
இதனை நிறைய திரைப்படங்களிலும், நிகழ்ச்சிகளிலும் ட்ரோல் செய்துள்ளனர். தற்போது இவர், Are You Ok Baby என்னும் படத்தை இயக்கியுள்ளார்.
செப்டம்பர் 22ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இத்திரைப்படத்தில் முல்லை அரசி, சமுத்திரக்கனி, மிஸ்கின், ரோபோ ஷங்கர், அபிராமி, வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் முல்லை அரசி ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது, முல்லை அரசி அவர்கள் லக்ஷ்மி அவர்களின் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோ வைரல் ஆனது. ஆனால், அது நடிப்புக்காக செய்தது என முழு பேட்டி வீடியோ வெளியானபின் தெரிந்துள்ளது.