'96' படத்தில் LipLock..? இப்படி ஒரு சீன் இருக்கா..? படம் ரிலீஸ் ஆகி இத்தனை நாள் கழிச்சு எதுக்கு..?

2018ம் ஆண்டு இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், பகவதி பெருமாள், தேவதர்ஷினி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், நல்ல வசூலையும் பெற்றது.
முக்கியமாக, இப்படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்திருந்தார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.
காதலே காதலே பாடல் இன்றும் பலரது ரிங்டோன் ஆக இருந்து வருகிறது. இப்படம் வெளியாகி படத்திற்கும், இதில் நடித்த நடிகர் நடிகைகளும் பல விருதுகளை பெற்றனர்.
இந்நிலையில், அப்படத்தில் இடம்பெறவிருந்த ஒரு முக்கிய காட்சி குறித்து விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் 96 படம் பற்றி கூறும்போது, இதுவரை யாரும் அறிந்திராத ஒரு விஷயத்தை கூறினார்.
அதாவது, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் முத்தக்காட்சி இருந்ததாகவும், அந்த காட்சி தவறான முன் உதாரணம் ஆகி விடும் என்றும் படப்பிடிப்பு செய்யாமல் நீக்கி விட்டதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.