'உங்க பார்வை தான் தப்பா இருக்கு..' மோசமான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்..
தமிழ் திரையுலகில் சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனைத் தொடர்ந்து, பீஸ்ஸா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ஓமை கடவுளே, மன்மதலீலை பொன்றை பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர் தற்போது, பிரபல ஹீரோ அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் அவர்களை காதல் திருமணம் செய்துள்ளார்.
தும்பா, அன்பிற்கினியாள் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 13ம் தேதி நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதில் கீர்த்தி பாண்டியன் நிறம் குறித்து சிலர் மோசமான கமெண்ட்ஸ் பதிவு செய்திருந்தனர். ஆனால், பலரும் கீர்த்தி பாண்டியனுக்கு ஆதரவாக கமெண்ட் செய்தனர்.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் பிரபல முன்னணி சேனலுக்கு அசோக் செல்வன் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில், ‘வெள்ளையாக இருந்தால் அழகு, கருப்பு இருந்தால் அழகு இல்லை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒன்றுமே இல்லை. வெள்ளை என்பது ஒரு நிறம் தான் அழகு இல்லை. இது மிகவும் தவறான பார்வை’ என பேசியுள்ளார்.