மணமகளாக ஹன்சிகா.. வெளியான போட்டோ & வீடியோ.. கனவுக்குள் நுழைகிறேன்.. வைரலாகும் பதிவு!
தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார்.
ஷக்கலக்கா பூம் பூம் என்னும் தொடர் மூலம் அறிமுகமாகி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போல கொழுமொழுக் பெண்ணாக இருந்த இவரை “சின்ன குஷ்பு” “குட்டி குஷ்பூ” என கோலிவுட் வட்டாரம் செல்லமாக அழைத்து வந்தது. இந்நிலையில், தற்போது, செம பிட்டாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் இவரது 50வது படமான மஹா வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 3 படங்கள் உள்ளன. இந்நிலையில், சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் திருமணம் குறித்த செய்தி தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்துகொள்ள தயாராகி உள்ளனர். தனது வருங்கால கணவருடன் பாரிஸில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவர் முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டார்.
இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சொஹைல் கதூரியாவுக்கு, ரிங்கி என்ற பெண்ணுடன் 2016ம் ஆண்டு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. கோவாவில் நடந்த சொஹைல், ரிங்கியின் திருமணத்தில் ஹன்சிகா கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவும் வெளியானது. சொஹைலின் முன்னாள் மனைவி ரிங்கி ஹன்சிகாவின் தோழி என்று சொல்லப்படுகிறது. ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார் சொஹைல். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தான் ஹன்சிகாவுக்கும், சொஹைலுக்கும் இடையே பழக்கம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகா தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமானதையே எங்களால் இன்னும் தாங்க முடியவில்லை. இந்நிலையில் இரண்டாம் தாரமாக போகிறாரே இந்த ஹன்சிகா. அவருக்கு இதெல்லாம் தேவையா என தீவிர ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. அன்று காலையே ஹல்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருமணம் முடிந்த பிறகு டிசம்பர் 4ம் தேதி மாலை விருந்தினருக்காக பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். போலோ மேட்ச், கசினோ தீம் பார்ட்டியாம்.
இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமையான அரண்மனையில் நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமண கொண்டாட்டம் சூஃபி இசை கச்சேரியுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றை சோஹைல் கதுரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. இதில் ஹன்சிகா மணமகள் உடையில் அழகு தேவதை போல் சோஹைல் கதுரியாவுடன் நடந்து வருகிறார்.
மேலும் ஹன்சிகாவின் மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நாளை இவர்களுடைய திருமணம் நடக்கிறது. இவர்களுடைய திருமண ஒளிபரப்பு உரிமையை hotstar நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்களின் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் முதல் குடும்பத்தினர் வரை அனைவருக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.