'உயிர் போகும் நேரத்திலும் நயன் இதைத்தான் செய்வார்..' சர்ச்சையை கிளப்பிய மாளவிகா மோகனன் பேச்சு!

malavika mohanan speaks about nayanthara movie particular scene nayanthara fans commenting against it

கல்லூரி படிக்கும் காலம் முதலே விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த மாளவிகா மோஹனன், அதன் மூலம் மலையாள மொழியில் பட்டம் போலே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பின் மூலம் மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.

malavika mohanan speaks about nayanthara movie particular scene nayanthara fans commenting against it

அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரிஷா போன்றோர் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு விஜய் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். தனுஷ் ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் OTT தளத்தில் நேரடியாக வெளியான நிலையில், பெரிய அளவிற்கு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

malavika mohanan speaks about nayanthara movie particular scene nayanthara fans commenting against it

மேலும், யுத்ரா திரைப்படத்தில் நடித்து வரும் மாளவிகா, அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். பிற நடிகைகளை போல போட்டோஷூட் கலாச்சாரத்தை விடாது பின்பற்றி வரும் மாளவிகா, தற்போது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பாலோயர்ஸ் ஏராளம்.

malavika mohanan speaks about nayanthara movie particular scene nayanthara fans commenting against it

இந்நிலையில், நடிகை நயன்தாராவை நடிகை மாளவிகா மோகன் ஒரு பேட்டியில் கலாய்க்கும் வகையில் பேசியுள்ளது வைரலாக பேசப்பட்டு வருகிறது. உயிர் போகும் நேரத்தில் கூட மருத்துவமனையில் முழு மேக்கப் போட்டிருப்பார்கள். அது கமர்சியல் படமாக இருந்தாலும் எப்படி நடக்கும் என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.

malavika mohanan speaks about nayanthara movie particular scene nayanthara fans commenting against it

அவர் சொல்லியது ராஜா ராணி திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்த ஹாஸ்பிடல் காட்சியை தான் கலாய்க்கும் வகையில் பேசி இருப்பார். இந்த தகவலை அறிந்த நயன்தாராவின் ரசிகர்கள் கடுப்பாகி நடிகை மாளவிகா மோகனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Share this post