ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பாரதி கண்ணம்மா கிளைமேக்ஸ்..

bharathi kannamma climax story sequence getting spread on social media

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் இருந்து வந்தது. இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

bharathi kannamma climax story sequence getting spread on social media

டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

bharathi kannamma climax story sequence getting spread on social media

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த இந்த தொடர், தற்போது மோசமான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. ஒரே கதையை சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஜவ்வு போல இழுத்து வருவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

bharathi kannamma climax story sequence getting spread on social media

இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. சீரியலில் ஹேமா வேடத்தில் நடித்து வரும் லிசா சீரியல் இயக்குனர் அகிலன் அஞ்சலி உளிட்டோருடன் இணைந்து வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் மக்கள் சீரியலை எப்படா முடிப்பீங்க என கேட்கிறாங்க ஆனால் எங்களுக்கு எண்டே கிடையாது என கூறுவது போல தெரிவித்திருந்தனர்.

bharathi kannamma climax story sequence getting spread on social media

தற்போது, ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பாரதியின் டிஎன்ஏ ரிசல்ட் வந்துவிடவே, பாரதி உண்மையை தெரிந்து கொள்கிறார். எனவே கண்ணம்மாவின் காலில் விழுந்தாவது அவரிடம் மன்னிப்பு கேட்டு, தன்னுடைய மகள்களான லட்சுமி மற்றும் ஹேமாவுடன் சேர்ந்து வாழ துடிக்கும் பாரதி, டெல்லியில் இருந்து கண்ணம்மாவை சந்திக்க செல்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத ஒரு பிரபலம் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

bharathi kannamma climax story sequence getting spread on social media

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவுக்கு எதிராக செயல்பட்டு சீரியலை மிகவும் விறுவிறுப்பாக்கிய துர்கா ஜெயிலிலிருந்து ரிலீஸ் ஆகி வரும் போது எதிர்பாராமல் பாரதியை சந்திக்கும் துர்கா, உங்களிடம் பல வருடங்களாக ஒரு உண்மையை கூற வேண்டும் என முயற்சி செய்து வருவதாக கூறி, பாரதியின் முன்னாள் காதலியான ஹேமாவை கொன்றது மற்றும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றி வைத்தது என அனைத்தையும் செய்தது வெண்பா தான் என கூறுகிறார்.

bharathi kannamma climax story sequence getting spread on social media

உங்களை காதலித்ததால், உங்களை அடைய வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்தார் என உண்மையை கூற, வெண்பா செய்த துரோகத்தை கேட்டு பாரதி அதிர்ச்சியடைவது போல் அடுத்து வர எபிசோடுகள் நகரும் என ஒரு தகவல் வைரலாகி வருகிறது. எனினும் பாரதி மனம் திருந்தி வந்தாலும் கண்ணம்மா இனி ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share this post