அடடே.. ஜி பி முத்துவா இது.. திருநங்கை கெட்டப்பில் வெளிவந்த மிரட்டலான போஸ்டர்..!
ஜி.பி.முத்து டிக் டாக்கில் வீடியோவை வெளியிட்டு பிரபலமானவர். ஒரு கட்டத்தில் டிக் டாக் தடைசெய்யப்பட்டது, ஆனால் லாக்டவுன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றார்.
அதிலிருந்து மீண்டு வந்த ஜி.பி.முத்து யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் தனக்கு வந்த கடிதங்களைப் படித்து அதில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவர் தனது கடிதங்களை திட்டும் வீடியோ இன்றும் ஒரு மீம் டெம்ப்ளேட்டாக மாறும் அளவுக்கு பிரபலமானது.
யூடியூப் மூலம் கிடைத்த புகழால் ஜி.பி.முத்துவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக ஜி.பி.முத்து பங்கேற்றார்.
இரண்டு வாரங்கள் கழித்து மகனைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து. 2 வார பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஜி.பி.முத்துவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
ஓ மை கோஸ்ட் படத்தில் சன்னி லியோனுக்கு ஜோடியாக நடித்த ஜி.பி.முத்து, அடுத்து அஜித்தின் துணிவு படத்தில் ஒரு காட்சியில் வந்து கைதட்டல் பெற்றார். அதையடுத்து, அவருக்கு பட வாய்ப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ஜி பி முத்து ஆர்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜிபி முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. மேலும், அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.