அக்கா பாவம் விட்ருங்க.. பிரபலத்திடம் கெஞ்சிய சாய்பல்லவியின் தங்கை..!
சாய் பல்லவி, சினிமா துறையில் இருந்து ஓராண்டு காலம் ஒதுங்கி, நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்தார். இருப்பினும், அவர் இப்போது திரும்பி வந்து பல படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். தற்போது ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு படம் கைவசம் உள்ளது. விரைவில் ஹிந்தி சினிமாவிலும் அடியெடுத்து வைக்கிறார்.
அவரது சமீபத்திய படங்களில் ஒன்று நாக சைதன்யாவுடன் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சந்து மொண்டேடி இயக்கும் இந்தப் படத்தில், சாய் பல்லவி மீனவரைக் காதலிப்பவராக நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். கமல்ஹாசன் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும், சாய் பல்லவி பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தில் சீதா தேவியாக நடிக்கிறார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாய் பல்லவி தனது தங்கை குறித்த சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, தனக்கு பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் இல்லை எனவும், இரவு நேரத்தில் தான் தூங்குவேன். அதனால் படப்பிடிப்பில் தூங்காமல் 30 நாட்கள் கஷ்டப்பட்டதாகவும், ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் சுத்தமாக முடியவில்லை. தனது தங்கையிடம் கூறி அழுததாகவும், தன் தங்கை தனக்கு தெரியாமல் இயக்குனரையும் தயாரிப்பாளரையும், சந்தித்து அக்காவால் இரவு ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. விடுமுறை கொடுங்கள் என கெஞ்சி கேட்டுள்ளார்.
அதன் பின்னர் தயாரிப்பாளர் ஒரு பத்து நாளுக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க அதுக்கு அப்புறமா ஷூட்டிங் வர சொல்லுங்க என கூறி அனுப்பிவிட்டாராம். பின்னர் பத்து நாட்கள் ஓய்வு எடுத்த பின்னரே சாய்பல்லவி அப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.