குட் நைட் பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று குட் நைட். குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் பெற்று சாதனை படைத்தது.
இந்த படத்தில் மணிகண்டன், மீரா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்க விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். முன்னதாக, மீரா முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
மீராவுக்கு குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில், மீரா ரகுநாத்துக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்துள்ளது. தனது வருங்கால கணவருடன் மீரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Share this post