இப்ப சொல்றேன் என்னை மன்னித்துவிடு.. த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..!

த்ரிஷா குறித்து தவறான முறையில் பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து, நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் பின்னர் பேசிய மகளிர் ஆணையம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
நான் செய்தது தவறு இல்லை மன்னிப்பு கேட்க மாட்டேன் என மன்சூர் அலிகான் தெரிவித்து வந்த நிலையில், இன்று நடிகை திரிஷா குறித்து பேசியதற்காக நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக” ஆமீன். என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்துள்ளது.
Share this post