மீண்டும் VTV கூட்டணி.. உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு வீடியோ.. மகிழ்ச்சியில் சிம்பு !

Gautham menon udhayanidhi stalin and simbu joins for the next upcoming movie

டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

Gautham menon udhayanidhi stalin and simbu joins for the next upcoming movie

சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.

Gautham menon udhayanidhi stalin and simbu joins for the next upcoming movie

இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார்.

Gautham menon udhayanidhi stalin and simbu joins for the next upcoming movie

சிம்பு, த்ரிஷா, கணேஷ், நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, தற்போது வரை இளசுகளின் பேவரைட் ஆக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.

Gautham menon udhayanidhi stalin and simbu joins for the next upcoming movie

பொதுவாக ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டால், அதன் 2ம் பாகம் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழத்தொடங்கிவிடும். அந்த வகையில், 10 வருடங்கள் ஆகியும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

Gautham menon udhayanidhi stalin and simbu joins for the next upcoming movie

சமீபத்தில், சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சிந்து இதானி, மேலும், நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

Gautham menon udhayanidhi stalin and simbu joins for the next upcoming movie

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Gautham menon udhayanidhi stalin and simbu joins for the next upcoming movie

தற்போது, விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் - சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து, சிம்பு - உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளனர்.

Gautham menon udhayanidhi stalin and simbu joins for the next upcoming movie

இவர்கள் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிம்பு அமெரிக்கா சென்றதால், இப்படத்தின் டப்பிங் பணிகள் தடைபட்டுள்ளது.

Gautham menon udhayanidhi stalin and simbu joins for the next upcoming movie

அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் டப்பிங் பேசி முடிப்பார் என கூறப்படுகிறது. வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் வருகிற செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share this post